×

தபால் ஓட்டு குறித்து மண்டல அலுவலர், வாக்குச்சாவடி அலுவலருக்கு பயிற்சி

 

கோவை, ஏப். 3: மக்களவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்து வாக்கு செலுத்தலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், போலீசார் தபால் மூலம் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கு என 15 ஆயிரத்து 838 தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை, பொள்ளாச்சி மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் ஓட்டு குறித்த பயிற்சி நோடல் ஆபிசர் அபிராமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தபால் ஓட்டுகளை பதிவு செய்வது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், தபால் ஓட்டுகளை பதிவு செய்யும்போது பேலட் பேப்பர் தனியாகவும், வாக்காளர்களின் ஒப்புகை சீட்டை தனியாகவும் மூடி முத்திரையிட்டு கவனமாக அனுப்ப வேண்டும்.

தபால் ஓட்டுக்கு பதிவு செய்திருக்கும் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தினை விநியோகிக்க வேண்டும். வீடுகள் பூட்டி இருந்தால் தொடர்ந்த 3 நாட்கள் சென்று கொடுக்க வேண்டும். மேலும், தபால் ஓட்டுகளை கவரில் போட்டு அனுப்பும் போது கவனமுடன் செயல்பட்டால் செல்லாத ஓட்டுகள் ஏற்படுவதை தடுக்க முடியும். எனவே, தபால் ஓட்டு பதிவில் ஈடுபடும் ஊழியர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது.

The post தபால் ஓட்டு குறித்து மண்டல அலுவலர், வாக்குச்சாவடி அலுவலருக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Election Commission ,Lok ,Sabha ,
× RELATED பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க...